படுமோசமான நிலையில் இலங்கை - Moody's Analytics எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கைக்கு கடினமான பாதை உள்ளதென Moody's Analytics இன் மூத்த பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர் செய்தி சேவையிடம் கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Moody's Analytics சிரேஷ்ட பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறுகையில்,
நினைப்பது போல் இந்த கடன் வசதி என்பது, இலங்கையின் நெருக்கடிக்கு ஒரு வெள்ளி தோட்டா (silver bullet) அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எவ்வளவு நிதியுதவி அல்லது ஆதரவு வழங்கினாலும், இலங்கையின் நிலைமை இன்னும் கடினமானதாகவே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.