இலங்கை சமூக பாதுகாப்பு சபை தேசிய விருது: திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் கௌரவிப்பு!
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, இன்று (14) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
1000க்கும் மேற்பட்ட பயனாளர்களை சமூக பாதுகாப்பு சபையில் இணைத்துக் கொண்டமைக்கான தேசிய விருதினை மூதூர் பிரதேச செயலகம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இதற்கான வெற்றிக் கேடயத்தை மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் பெற்றுக்கொண்டார்.
இந்தச் சாதனைக்காக உழைத்த மூதூர் பிரதேச செயலகத்தின் பின்வரும் உத்தியோகத்தர்களும் தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டனர்:


