பிரிட்டன் மற்றும் அயர்லாந்துடன் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!
பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
சுகாதார நலன் திட்டங்கள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதாரத்துறையில் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளல் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களின உரிமைகளை உறுதி செய்தல் ஆகிய விடயங்களில் உதவிகளை வழங்குவதாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆகியன இணக்கம் வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் சுகாதாரத்துறையில் பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பமும் இந்த உடன்படிக்கையின் மூலம் உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
