சர்வதேச அளவில் சிகிரியாவிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்கள் பட்டியலை Booking.com என்ற வலைத்தளம் வெளியிட்டுள்ளது.
குறித்த வலைத்தளமானது 360 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின் சிகிரியாவை முடிசூட்டியுள்ளது.
இலங்கையின் கட்டடக்கலை சிறப்பு
பதின்மூன்றாவது டிராவலர் ரிவியூ விருதுகளின் (Traveller Review Awards) ஒரு பகுதியாக, Booking.com உலகில் மிகவும் வரவேற்கத்தக்க 10 நகரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிகிரியா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயினில் உள்ள கசோர்லா மற்றும் பிரேசிலில் உள்ள உருபிசி ஆகியவை பிற இடங்களுடன் சேர்த்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நியூசிலாந்திலுள்ள டௌபோ, அமெரிக்காவிலுள்ள சென். அகஸ்டின், இத்தாலியிலுள்ள ஓர்வியோட்டோ, கொலம்பியாவிலுள்ள மணிசாலேஸ் மற்றும் ஜேர்மனியிலுள்ள குவெட்லின்பர்க், தாய்லாந்திலுள்ள கோ லந்தா, பிரித்தானியாவிலுள்ள செஸ்டர் ஆகிய நகரங்கள் இவ்வாறு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் கலாசார முக்கோணம்
Booking.com, இலங்கையின் சிகிரியா பற்றி கூறுகையில் "இலங்கையின் 'கலாசார முக்கோணத்தின்' மையத்தில் அமைந்துள்ள சிகிரியா, இயற்கை அழகையும் ஆழமான வரலாற்றையும் கொண்டுள்ள ஒரு இடமாகும்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான சிகிரியா பண்டைய இலங்கையின் கட்டடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், சிகிரியா சாகசம் மற்றும் அமைதியின் மறக்க முடியாத கலவையை வழங்குகிறது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)