சாரா தொடர்பில் இந்தியாவிடம் இலங்கை உதவிகோர வேண்டும் என அறிவுறுத்தல்
அரசாங்கம் தற்போதைய சந்தர்ப்பத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது மேற்கு முனையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியின் மனைவியான சாராவை கண்டறிவது பற்றியே பேச்சு நடத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் தற்போதைய தேவை கிழக்கு முனையத்தை வழங்குவதா, மேற்கு முனையத்தை வழங்குவதா என்பது அல்ல.
கொழும்பு துறைமுகத்தின் இந்த முனையங்களை வழங்குவது தொடர்பில் இந்தியாவிடம் உதவி கோர தேவையில்லை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அறிந்து கொள்ளவே இந்தியாவின் உதவியை கோர வேண்டும்.
குண்டுதாரியின் மனைவி இந்தியாவில் இருப்பார் என்றால், அரசாங்கம் செய்ய வேண்டியது துறைமுகத்தின் முனையத்தை குத்தகைக்கு கொடுப்பது குறித்து இந்தியாவிடம் பேசுவதை விடுத்து, அந்த பெண்ணை இலங்கைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri