துப்பாக்கிச்சூட்டுக்களால் அதிரும் இலங்கை: ஒரு மாதத்தில் மாத்திரம் 20 பேர் படுகொலை
இலங்கையில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 30 ஆம் திகதி முதல் நேற்று (29) வரை மாத்திரம் 20 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாகிச்சூடு
அத்துடன், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேகநபர்கள் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக்குழு
சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், அது சம்பந்தமான வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றும் கொழும்பில் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan