இலங்கையில் ஒரு மில்லியனை தாண்டிய சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தகவலின் படி, ஜனவரி 01 முதல் மே 25 வரை மொத்தம் 1,006,097 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு மே 01 முதல் மே 25 வரை மொத்தம் 109,213 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
இந்தக் காலப் பகுதியில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதோடு 39,070 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டு மே மாதத்தில் இங்கிலாந்திலிருந்து 7,661 சுற்றுலாப் பயணிகள், சீனாவிலிருந்து 7,139 பேர், ஜெர்மனியிலிருந்து 6,143 பேர், பங்களாதேசிலிருந்து 5,637 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 4,917 பேர், பிரான்சிலிருந்து 4,660 பேர், அமெரிக்காவிலிருந்து 2,959 பேர், ரஷ்யாவிலிருந்து 2,950 பேர் மற்றும் கனடாவிலிருந்து 2,783 பேர் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகரின் மனைவி.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam
