ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம்
21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், இலங்கை வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
இந்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டிகள் டுபாயில் நடைபெறுகின்றது.
இதன்போது மகளிருக்கான 4x400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
Jathya Kirulu(ஜாத்ய கிருலு), Jitma Wijethunga(ஜித்மா விஜேதுங்க), Themiya Rajapaksha(தெமியா ராஜபக்ச), and Nuhansa Kodituwattku(நுஹான்சா கொடிது) ஆகிய நால்வரே இலங்கை அணி சார்பாக பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக, இலங்கையின் மகளிர் அணித்தலைவி நெத்மிகா மதுஷானி ஹேரத் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்போது அவர் 13.01 மீட்டர் தூரத்தை பதிவு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |