நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை
நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் (6) நாளை மறுதினமும் (7) மூடப்படும் என வலயக்கல்விப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அசாதாரண காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் நாட்களில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயம்
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் விடுமுறை

இதன்படி, நாளை(06.07.2023) மற்றும் நாளை மறுதினம்(07.07.2023) ஆகிய நாட்களில் இவ்வாறு ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலீடாக, காலநிலை சீரடைந்ததன் பின்னர் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வகுப்புகள் நடத்தப்படும்.
அதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ஹட்டன் கல்வி வலயக் கல்வி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் ஆன்மா சாந்தியடையவே மகிந்த பழிவாங்கப்படுகின்றார்! ராஜபக்ச தரப்பு அதிரடிக் குற்றச்சாட்டு
நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன்! சிறுபான்மையினரை விமர்சிக்கவில்லை - விளக்கம் கூறும் லக்ஸ்மன் கிரியெல்ல