நிரம்பி வழியும் இலங்கையின் திறைசேரி! எரிபொருள் விலையை மூன்று முறை அதிகரிக்க காரணம் என்ன
இந்த மாதம் மாத்திரம் மூன்று தடவைகள் எரிபொருளை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் சிங்கப்பூர் நாட்டின் 'பிளெட்' விலைச்சுட்டெண்ணுக்கு அமைவாகவே இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்கிறது.இந்த விலைச்சுட்டெண்ணுக்கமைய மூன்று தடவைகள் எரிபொருளை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
எரிபொருள் மீதான வரி
அரசாங்கம் எரிபொருள் மீது அதிக வரி அறவிடுகிறது.எரிபொருள் மீதான வரியை குறைத்தால் விலையை குறைக்கலாம்.
மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானவுடன் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நோர்வே உட்பட பல நாடுகள் எரிபொருள் மீதான வரியை குறைத்து மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கின்றன.

திறைசேரி நிரம்பி வழிகிறது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் எரிபொருள் மீதான வரியை குறைத்து மக்களுக்கு நிவாரண விலையில் எரிபொருளை விநியோகிக்கலாம்.
எந்த அடிப்படையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.
ஆகவே எரிபொருள் விலைச்சூத்திரத்தை இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam