இலங்கையில் மின்சாரக் கட்டணங்களின் உயர்வினால் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
இலங்கையில் மின்சாரக் கட்டணங்களின் உயர்வு அறிவிப்பு காரணமாக, கொழும்பு பங்குச்சந்தையின் பங்குகள் வீழ்ச்சியடைந்து, கடந்த ஒன்றரை மாதங்களில் மிகக் குறைந்த வருமானத்தை பெற்றதாக பங்குச்சந்தை முகவரொருவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய அனைத்து பங்கு விலைக் குறியீடு 0.49 சதவீதம் அல்லது 41.28 புள்ளிகள் குறைந்து 8,411.42 அலகுகளாக இருந்தது. 2023 ஜனவரியில் 65 வீத மின் கட்டண உயர்வு குறித்து அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன் காரணமாகவே முதலீட்டாளர்களின் பங்களிப்பு வீழ்ச்சியடைந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு போதுமானதாக இல்லாததால் ஜனவரியில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் திரவ தன்மைக்கொண்ட, எஸ் அன்ட் பி எஸ்எல் 20, குறியீடு 0.92 சதவீதம் அல்லது 24.56 புள்ளிகள் குறைந்து 2,631.03 ஆக முடிவடைந்தது.
சந்தையில் இன்று 856 மில்லியன் ரூபா வர்த்தக புரள்வு மேற்கொள்ளப்பட்டது.
இது இந்த காலாண்டில் தினசரி சராசரி புரள்வாக இருந்த 2.9 பில்லியன் ரூபாயில்
நான்கில் ஒரு பங்காகும்.
சந்தையில் 13.5 மில்லியன் ரூபா நிகர வெளிநாட்டு வரவு காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.



