இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளியான தகவல்

Colombo Jaffna Sri Lanka
By Rakesh Apr 07, 2025 01:07 PM GMT
Report

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.

கொழும்பில் நடந்த பயங்கரம் - சிறுவர்கள் மீது மோதிய கார் - சிறுமி பலி - சாரதி தொடர்பான தகவல்

கொழும்பில் நடந்த பயங்கரம் - சிறுவர்கள் மீது மோதிய கார் - சிறுமி பலி - சாரதி தொடர்பான தகவல்

சனத்தொகையில் அதிகரிப்பு

இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிய 15ஆவது தேசிய சனத்தொகை கணக்கெடுப்பு 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது.

இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளியான தகவல் | Sri Lanka S Population Figures Released

சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகின்றது. மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையைக் கொண்ட மாகாணமாக உள்ளது. 24 இலட்சத்து 33 ஆயிரத்து 685 பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச அரசியல் அறிவு தேவை: வஜிர அபேவர்தன

சர்வதேச அரசியல் அறிவு தேவை: வஜிர அபேவர்தன

கொழும்பு மாவட்டம்

அதனைத் தொடர்ந்து 23 இலட்சத்து 74 ஆயிரத்து 461 பேருடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான சனத் தொகையைக் கொண்டுள்ளது. குருநாகல், கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தலா 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர்.

இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளியான தகவல் | Sri Lanka S Population Figures Released

மறுபுறம், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 542), மன்னார் (ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 674), கிளிநொச்சி (ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 434) மற்றும் வவுனியா (ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாகத் தொடர்ந்து காணப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 3 ஆயிரத்து 549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 50 நபர்கள் வசிக்கின்றார்கள்.

முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 1,700 பேர் கைது!

முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 1,700 பேர் கைது!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US