இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை
ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்டிருந்த விரிவான விசாரணைகள்
குறித்த அறிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அதன் சட்ட நடைமுறைப்படுத்தல் பிரிவினர், பாதுகாப்பு படையினர் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் என்பன விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
இதன்படி, சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டமை தெரியவந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பழியை இராணுவப்புலனாய்வு பிரிவு மீதும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் அப்பட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் வேதன பட்டியல்
இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிக்கிறது. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் வேதன பட்டியலில் இருந்ததில்லை.

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சபையில் அச்சம் வெளியிட்ட சாணக்கியன்(Video)
இவ்வாறான தீங்கிழைக்கும் மற்றும் மோசமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளுக்கு சனல் 4 ஊடகமே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri

படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
