பதவி விலகல் செய்வதாக அரசை மிரட்டிய அமைச்சர்
இலங்கையின் அமைச்சர் ஒருவர் பதவி விலகல் செய்யப் போவதாக மிரட்டிய நிலையில் அரசாங்கம் தாம் எடுத்த முடிவை மாற்றிக்கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று துணுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவருடைய அமைச்சின் செயலாளர் 60 வயதை எட்டிய நிலையில், புதிய செயலாளர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கையை மேற்கொண்டது.
எனினும் இதனை மாற்றி அவருக்கு சேவைக்காலத்தை நீடிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
பதவி விலகல் கடிதம்
குறித்த செயலாளர் விடயம் தெரிந்த அதிகாரி என்ற வகையில், அவருக்கு மேலும் பதவி நீடிப்பு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இல்லையெனில் உடனடியாக தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவேன் என அரசாங்கத்தை எச்சரித்தார்.
குறித்த அமைச்சரின் இந்த எச்சரிக்கை, அமைச்சரவையில் நெருக்கடியை ஏற்படுத்தியது மட்டுமன்றி, அமைச்சர் பல திட்டங்களை முன்னெடுத்த முக்கிய பிரதேசத்திலும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து ஓய்வுபெறவுள்ள அனைத்து செயலாளர்களும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பதவியில் நீடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
எனினும் அதன் பின்னர் 60 வயதை எட்டியவர்களுக்கு சேவை நீடிப்பு கிடையாது என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
