இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து உலக வங்கியின் எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் உலக வங்கி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் அண்மைய பொருளாதார செயல்திறன் முன்னேற்றம் காட்டினாலும், நாட்டின் பொருளாதார மீட்பு இன்னும் முழுமையடையவில்லை என்று உலக வங்கியின் புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“Better Spending for All” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள Sri Lanka Development Update அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதாரம் 4.6% வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கு தொழில்துறை மீட்சியும் சேவைத் துறையின் நிலையான வளர்ச்சியும் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2026 இல் வளர்ச்சி 3.5% ஆக குறையக்கூடும் என்றும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை அபாயங்கள் அதிகம் இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வறுமை விகிதம்
உலக வங்கியின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை பிரிவு இயக்குநர் டேவிட் சிஸ்லென் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அண்மைய முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், மீட்பு சமநிலை அற்றதும், முழுமையற்றதுமாகவே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவருக்கும் சமமான நன்மை பயக்கும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க, தனியார் துறை முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு அரச ரூபாயும் பயனுள்ள வகையில் செலவிடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பணவீக்கம் குறைந்திருந்தாலும், உணவுப் பொருள் விலைகள் உயர்ந்தே உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறுமை விகிதம் குறைந்திருந்தாலும், அது 2019 அளவின் இரட்டிப்பாகவே உள்ளது. பல குடும்பங்கள் இன்னும் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன.
மக்கள்தொகையில் சுமார் 10% பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே இருந்தாலும், இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
போஷாக்கின்மை நிலைமை பல சமூகங்களில் நீடிக்கிறது. உலக வங்கி, தனியார் துறை வழிநடத்தும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமைப்புசார் சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீடு
அதில், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு தடையாக உள்ள கட்டுப்பாடுகளை நீக்குதல், வரி நிர்வாகம், நிலம் மற்றும் தொழிலாளர் சந்தை விதிகளை நவீனப்படுத்துதல் ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அரசு செலவின திறன் மேம்பாடு. தற்போது அரசின் மொத்த செலவுகளில் 80% க்கும் மேல் சம்பளங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வட்டி கட்டணங்களுக்கு செலவாகிறது.
இதனால் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற துறைகளுக்கு முதலீடு குறைவாக உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால், அரசு தற்போதைய செலவுகளை மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.
நிலையான பொருளாதார மீட்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் வளர்ச்சி பெற, இலங்கை நிதி நிலைத்தன்மை, நல்லாட்சித் திறன் மற்றும் திறமையான வள மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என உலக வங்கி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
