ஒரே நாளில் நான்கு சிறைச்சாலைகளை கட்டுக்குள் கொண்டு வந்த நீதி அமைச்சர் - களத்தில் அதிகாரிகள்
சிறைச்சாலைகளில் நிகழும் அசாதார நிலை குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கைதிகளின் நலனை உறுதிச் செய்யும் விதமாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மோதல்களை குறைக்கத் திட்டம்
இதற்கமைய, களுத்துறை சிறைச்சாலைக்கு சென்ற ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களுக்கு உரையாற்றுகையில்,
அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதையும் கைதிகளின் நலனை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, தீவில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு அமைப்பு நிறுவப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய அமைப்பு
அரச அதிகாரிகளால் கூட்டாக நிறுவப்படும் இந்தக் கூட்டு அமைப்பு, பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மாதத்திற்கு ஒரு முறையாவது கூட வேண்டும்.
தீவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கூட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று களுத்துறை, காலி, புஸ்ஸா மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளை மையமாகக் கொண்டு பிராந்திய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்புடன் கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்றார்.
இந்த நடவடிக்கையில், களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening