படுகொலை செய்வதற்காக சென்ற நபர்கள்! அதிரடி துப்பாக்கிச் சூட நடத்திய பொலிஸார்
கொஸ்கொடை, மகாஹிந்துரவ பகுதியில் கொலைச் செய்யச் சென்று கொண்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
'லொகு பெட்டி' தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர், 'கரந்தெனிய சுத்தா' தரப்பைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இதன்போது, பொலிஸாரிடம் சிக்கிய துப்பாக்கிதாரி தப்பிச் செல்ல முயன்றபோதே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், அதில் அவர் காயமடைந்துள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'லொகு பெட்டி' என்ற குற்றவாளியின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவர், கடந்த 01 ஆம் திகதி அஹூங்கல்ல, வெலிகந்த பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.