2030 ஆம் ஆண்டில் இலங்கை அடையவுள்ள பொருளாதார இலக்கு
பாரிய இயற்கை பேரழிவை எதிர்கொண்ட போதிலும், 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதாரத்தை அடைய முடியும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
தேசிய உற்பத்தித்திறன் செயலகம் நடத்திய முதல் சான்றளிக்கப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர் (CPS) சான்றிதழ் விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
இலக்குக்கான திட்டங்கள்
டித்வா சூறாவளி இலங்கை பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு நாடாக மீண்டும் உயர இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மேலும் ஏற்றுமதியாளர்களில் சுமார் 550 பேர் சமீபத்திய பேரழிவால் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கத்தால் மிக விரைவில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடைய முடியும்.

மேலும், தற்போது 98.94 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ப்பதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித்திறன் என்ற கருத்தை பிரபலப்படுத்துவதே இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரே வழி என்றும் அவர் கூறினார்.