இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம்
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை வெளியிடும் போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (2015) ரூ. 2,644,240 மில்லியன் இது ரூ. 2,768,293 மில்லியனாக உயர்ந்துள்ளது.
2024 இன் இரண்டாவது காலாண்டில், விவசாய நடவடிக்கைகள், தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் முறையே 1.7 சதவீதம், 10.9 சதவீதம் மற்றும் 2.5 சதவீதம் நேர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
