இலங்கையின் நாணய நெருக்கடி - ஜப்பானிய வங்கி எச்சரிக்கை
உலகில் அதிக நாணய அபாயத்தைக் கொண்ட 7 நாணயங்களில் இலங்கை ரூபாவும் உள்ளடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் முன்னணி முதலீட்டு வங்கியாக Nomura Holdings Inc, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு
ஜப்பான் ,எகிப்து, ருமேனியா, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரியுடன் அதிக நிதி நெருக்கடியில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு, மாற்று விகிதம், நிதி ஆரோக்கியம் மற்றும் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட 8 முக்கிய குறிகாட்டிகளை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை மற்றும் நிரந்தர நாணய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி ஆகிய இரண்டு நாடுகளும் 138 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri