அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கணிசமாக அதிகரித்திருந்தது.
எனினும் இந்த வாரம் இலங்கை ரூபாவின் பெறுமதி பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் வலுவிழந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் டொலரொன்றின் கொள்வனவு விலை 320 ரூபாவாகவும், விற்பனை விலை 340 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வர்த்தக வங்கிகளில் நிலவரம்
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் நேற்றை நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.82 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14.03.2023) வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
