டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி! நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறித்து குழப்பமடைய தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
ரூபாவின் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் சில வர்த்தக வங்கிகளில் டொலரின் விற்பனை விலையானது 335 என்ற மட்டத்தை அடைந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வீழ்ச்சிக்கான காரணம்
மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் ஏற்பட்ட நிலைமையே இது. அதனை நிர்வகிப்பதற்கு மத்திய வங்கி செயற்படும்.
இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. டொலரின் விலையானது வழங்கலுக்கும், தேவைக்கும் இடையில் தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது மத்திய வங்கி 03 பில்லியன் டொலர்களை வாங்கியுள்ளது. அதனால்தான் டொலர்களின் பெறுமதி இந்த நிலையிலாவது இருக்கிறது. இல்லையெனில் இன்னும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |