மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு (Video)
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும்(15.06.2023) கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.
எனினும், கடந்த வாரத்தில் இருந்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது. அத்துடன் கடந்த மூன்று நாட்களாக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற நிலையில் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (15.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 335.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 417.00 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam