இலங்கையில் வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 310.62 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 313.52 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை விலை 332.99 ரூபாவில் இருந்து 336.09 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனது விலையானது 310 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை விற்பனை விலையானது 325 ரூபாவிலிருந்து 330 ரூபாவாக அதிகரிப்பினை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.69 ரூபாவிலிருந்து 314.16 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் விற்பனை விலையானது 330 ரூபாவிலிருந்து 332.50 ரூபாவாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
Parliament Live





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
