24 மணிநேரத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! இலங்கை மத்திய வங்கியின் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைவடைந்த நிலையில் நேற்றையதினம் சிறு அதிகரிப்பு பதிவானது.
எனினும் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் ரூபாவின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 316.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.78 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 338.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam