பல தரப்பிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் திட்டத்திற்கு நேற்றிரவு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது இலங்கைக்கு ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை அணுக உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டம் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம்ரூபவ் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல்தரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி வசதியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும்.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் மேறகொண்ட தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று காலை 8.30இற்கு ஆரம்பமாகும்.
அந்த
நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூவர்
வரும் இலங்கை
தூதுக்குழுவின் பிரதான அதிகாரி மசஹிரோ நோசாக்கியும் இந்த ஊடக
சந்திப்பில் பங்கேற்பார்கள்.