மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும், நேற்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 371.78 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 351.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 420.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 398.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
you may like this video
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri