இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மகிழ்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட அரசாங்கம்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் செயற்கையாக மேற்கொள்ளப்பட்டாலும் ரூபாயின் பெறுமதியானது டொலரின் தேவை மற்றும் விநியோகத்தினால் தீர்மானிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில், இன்று காலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் உலக வங்கியிடமிருந்து கடன் உதவித் தொகையும், ஆசிய வளர்ச்சி நிதியின் கடன் உதவித் தொகையும் பெற்ற பிறகு, பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இது நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, மற்றும் பொருட்களின் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam