இந்தியாவுடன் தடைப்பட்ட வர்த்தக பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கும் இலங்கை
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (இடிசிஏ) குறித்து இலங்கை விரைவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் ETCA பற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்பட்ட சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவித்திருந்தார்.
வர்த்தகத்தில் சமச்சீரற்ற தன்மை
முன்னதாக இந்த பேச்சுவார்த்தை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டபோதும் அதனை நிறைவுறுத்தமுடியவில்லை.
இலங்கையில் உள்ள கடும்போக்கு பிரிவினரிடமிருந்து, முக்கியமாக தேசியவாத குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டதே இதற்கான காரணமாகும்.
இந்தநிலையில் இந்தியாவுடனான வரவிருக்கும் பேச்சுக்களில், வர்த்தகத்தில்
சமச்சீரற்ற தன்மை பற்றிய வெளிப்படையான ஒப்புதலைப் பற்றி இலங்கை பேச்சுவார்த்தை
நடத்த முயலும் என் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
