51ஆவது குடியரசு தினத்தில் கால்பதிக்கும் இலங்கை..!
இலங்கையின் 51ஆவது குடியரசு தினம் மே 22ஆம் திகதியான இன்றைய தினம் கொண்டாப்படுகின்றது.
1972ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த ஶ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி சுதந்திர குடியரசாக மே மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.
மேலும்,1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி யாப்பு நீக்கப்பட்டு, குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
குடியரசு யாப்பு அறிமுகம்
இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்தல், ஐக்கிய இலங்கை ஆகிய விடயங்கள் இந்த யாப்பின் மூலமாகவே முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இலங்கை முழுமையாக விடுபட்டு குடியரசாக மாற்றம் பெற்றதை முன்னிட்டு 1972ஆம் ஆண்டின் மே மாதம் 22ஆம் திகதி நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, பாற்சோறு பொங்கி பொதுமக்கள் கோலாகலமான கொண்டாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.
அந்த வகையில் இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



