சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் - செய்ய முடியாதென நிராகரித்த அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தால் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட இரண்டு முக்கிய வருவாய் யோசனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இலவச சேவையாக இருக்கும் இரண்டு பகுதிகளின் அடிப்படை செலவினங்களை ஈடுகட்ட வேண்டும் என்ற பரிந்துரையுடன் சர்வதேச நாணய நிதியம் இந்த வருவாய் யோசனைகளை முன்வைத்துள்ளது..
நோயாளிகளிடம் கட்டணம்
அரசாங்க மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் செய்யப்படும் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது முதல் யோசனையாகும்.
அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்ட இரண்டாவது யோசனை பல்கலைக்கழக மாணவர்களிடம் கட்டணம் அறவிடுவதாகும்.
வறிய மக்களுக்கு நிவாரணம்
வறிய நிலையிலுள்ள மக்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகளை மக்களுக்கு நலன்புரி வழங்கும் அரசாங்கமாக இலங்கை பேணுவதால், மேற்கூறிய பகுதிகளில் வருமானத்தை எதிர்பார்க்கவில்லை என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.