பாகிஸ்தான் வழங்கிய மாம்பழங்களை ஏற்க மறுத்த இலங்கை
பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மாம்பழங்களை வழங்க முன்வந்திருந்தது.
எனினும், கோவிட் பெருந்தொற்று அபாயம் காரணமாக மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன.
சீனா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் மாம்பழங்களை அன்பளிப்பாக அளிக்க முன்வந்துள்ளது.
எனினும், இந்த அன்பளிப்புக்களை அநேகமான நாடுகள் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அன்பளிப்பினை பெற்றுக் கொள்வதற்கு முடியாமையையிட்டு வருந்துவதாக இலங்கை, கனடா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு அறிவித்துள்ளன.
கடந்த காலங்களில் பாகிஸ்தானிய அரசாங்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணும் நோக்கில் காலத்திற்கு காலம் மாம்பழங்களை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
