பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்துள்ள இலங்கை - மகிழ்ச்சியில் அமைச்சர்
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது மிகவும் கடினமான காரியமாக அமைந்திருந்தது. எனினும் தற்போது நிலைமை வெற்றியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் இடம்பெறும் ஆசிய பசுபிக் பிராந்திய பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் பொது மன்றத்தில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து நாடுகளினதும் உதவியுடன் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இலங்கை மீண்டும் முதலீடு மற்றும் வர்த்தக துறைக்கான சர்வதேச அடைவிடமாக மாறும் என ராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
அனைத்து கடன் உரிமையாளர்களுடனும் தொடர்ந்தும் வெளிப்படைத் தன்மையுடன்
செயற்படுவது இலங்கையின் நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.