சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சரிவு
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) அறிக்கையின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு சிறிய சரிவு பதிவாகியுள்ளது.
இந்த மாதத்தில் மொத்தம் 196,845 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது, ஜூலை 2025 உடன் ஒப்பிடும்போது 1.7வீத சரிவைக் குறிக்கிறது.
மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்தில் 44,547 வருகைகளுடன் இந்தியா உள்ளது.

இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 26வீதம் ஆகும்.
ஐக்கிய இராச்சியம் 21,834 பார்வையாளர்களுடன் இரண்டாம் இடத்தையும், அதைத் தொடர்ந்து நெதர்லாந்து 12,493 பேருடனும், சீனா 12,336 பேருடனும், பிரான்ஸ் 10,102 பேருடனும் அந்த மாதத்தில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,343,418 ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.