இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும் சாத்தியம்
இலங்கையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டில் இன்றைய தினம் நிலவும் வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.