இராணுவத்தினரால் இரகசியமாக பாதுகாக்கப்படும் ஜனாதிபதி! வெளியான தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இராணுவத்தினரால் இரகசியமாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கோட்டாபய ராஜபக்ச எங்கிருக்கின்றார் என்பது தெரியவராத நிலையில், அவர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும்,இராணுவப் பிரிவினால் பாதுகாக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய! கொழும்பு அரசியலில் ஏற்படும் திருப்புமுனை |
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் போராட்டக்காரர்களால் தற்போதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் கூடிய கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் இருப்பிடம் குறித்து தகவல் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பையடுத்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஜனாதிபதி தொடர்பில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
