கட்டுநாயக்க விரைந்த முக்கியஸ்தர் யார்... அப்பகுதியைச் சுற்றிவளைத்த மக்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பெருமளவிலான பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்றவற்றை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளதோடு போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.
அதேசமயம் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கட்டுநாயக்க விரைந்த முக்கியஸ்தர் யார்..
இந்த நிலையில், போராட்டங்கள் ஒருபுறம் நடந்துவர அந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி சொகுசு கார்கள் சில பயணித்துள்ளன.
முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும் நோக்கில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அங்கிருக்கும் பொதுமக்கள் இணைந்து குறித்த வீதியினை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, அந்த பகுதியில் வீதியை மறித்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.