பலாங்கொடை நகரை ஆக்கிரமித்த மக்கள் திரள்(Photos)
நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் தற்சமயம் நடத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிர நிலையை அடைந்ததையடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொடையில் ஒன்று திரண்ட பொதுமக்கள்
அத்துடன் கொழும்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பலாங்கொடை நகரிலும் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வண்ணம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலாங்கொடை நகரில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
புகைப்படம் - முகநூல்