தீவிரமடையும் போராட்டக் களம்! காலி தொடருந்து நிலையத்தை சுற்றிவளைத்த மக்கள்(Photos)
கொழும்பில் இன்று நடத்தப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் தலைநகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அத்துடன் கொழும்பு காலி முகத்திடலில் பொதுமக்கள் இலட்சக்கணக்களில் திரண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
காலியில் எதிர்ப்பு! கொழும்பை நோக்கி படையெடுக்கும் மக்கள்
இந்த நிலையில், குறித்த போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக காலியில் இருந்து பெருந்திரளான மக்கள் தொடருந்து மூலம் கொழும்பை நோக்கி வருகைத் தந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று காலை காலி பிரதான தொடருந்து நிலையத்திற்கு அருகில் மிக அதிகளவிலான மக்கள் ஒன்று திரண்டு சுற்றிவளைத்ததுடன், அங்கு சிறு முரண்பாட்டு நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
காலி தொடருந்து நிலையத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு வெளியிடப்பட்ட எதிர்ப்பினை அடுத்து தொடருந்தினை இயக்குவதற் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் போது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் - முகநூல்