இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக வெடித்த பாரிய போராட்டம்! இன்றுடன் ஒரு வருட பூர்த்தி (Video)
கோட்டாபய அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் ஒரு வருட காலத்தை கடந்துள்ள நிலையில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக சர்வமத தலைவர்களும் அழைக்கப்பட்டு காலி முகத்திடல் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வானது காலிமுகத்திடம் போராட்டக்காரர்களின் தலைமையில் இன்று (09.04.2023) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காலி முகத்திடல்,ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை ஆகிய பகுதிகளையும் முடக்கி அரசாங்கத்துக்கு எதிராக கடந்த வருடம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தின் காரணமாக இலங்கை அரசாங்கத்தில் மாபெரும் மாற்றமொன்று நிகழ்ந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதியை பதவியிலிருந்து வெளியேற்ற அனைத்து மக்களும் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாள் இன்றாகும்.
எனவே இதனை நினைவுக்கடுத்தும் முகமாக கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையகத்துக்கு முன்பாக இன்று (09.04.2023) 11 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
