தொடர்ந்தும் மறுக்கப்படும் எரிபொருள்! முடக்கத்தில் இலங்கையின் திட்டங்கள்
சர்வதேச பொருளாதார தடைகள்காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு வங்கிகள் நாணயக் கடிதங்களை (LoC)திறக்க மறுப்பதால், இலங்கையின் திட்டங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.
கலந்துரையாடல்கள்

இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான நேரடி கலந்துரையாடல்கள் உட்பட, இலங்கைத் தலைவர்களுக்கும் பல்வேறு ரஷ்ய பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. எனினும் கொடுப்பனவு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
எனவே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் மூன்றாம் தரப்பினருடன் தமக்கான கொள்வனவு கட்டளைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.
இந்தியா உதவி
இதனால் ரஷ்ய எண்ணெய்க்கான எந்தவொரு கொடுப்பனவும் ஒரு சிக்கலான பாதையில் செல்ல
வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்தும் எரிபொருளுக்காக இந்தியாவை
நம்ப வேண்டிய நிலையிலேயே இலங்கை உள்ளது.



