பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம் (photos)
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் இப் போராட்டம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
“அபகீர்த்தியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்“, “நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்“ எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது.
பல்வேறு கோஷங்கள்
இதன்போது, "அரசே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமைப்படுத்து", "அரசே மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்து", "தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், நில, வீட்டு உரிமையை உறுதி செய்", "வானத்தில் வட்டமிடும் விலைவாசியை மக்களுக்குக் கிட்டவாகக் கொண்டு வா", "வடக்கு, கிழக்கில் இன, மதவாத நோக்கிலான தொல்பொருள் தேடுதல்களை உடனடியாக நிறுத்து" போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.











