வசந்த முதலிகே மற்றும் வண. சிறிதம்ம தேரர் தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய கொம்பனி வீதி பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2022, ஆகஸ்ட் 19, அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக இருவரை சந்தேக நபர்களாக பெயரிட அனுமதி கோரிய பொலிஸார், அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது.
அனுமதி வழங்கிய மன்று
இதனையடுத்து அதற்கான அனுமதியை கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே வழங்கினார்.
முன்னதாக, ஆகஸ்ட் 19 அன்று களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகம் வரை நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.