பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் நிறைவு - நீதி அமைச்சர் ஹர்ஷன
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான சட்ட வரைவு இன்னும் சில நாட்களில் இறுதிப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சட்ட வரைவை இறுதிப்படுத்தும் நடவடிக்கை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவி்க்கையில்,
பயங்கரவாத் தடைச் சட்டத்தை நீக்குவதென்பது அரசின் தேர்தல் வாக்குறுதியாகும். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து, தற்போது சட்ட வரைவை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விவகாரத்தைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட குழு தற்போது மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri