பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு (Photos)
நாடளாவிய ரீதியில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு - ஆரையம்பதியில் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் தலைமையில் இந்தக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
செய்தி: ராகேஷ்,ருசாத்


மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri
