பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மாத்தளையில் முன்னெடுப்பு (Photos)
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் ஊர்தி நேற்று (27.09.2022) தம்புள்ளை, மாத்தளை பகுதியை வந்தடைந்துள்ளது.
ஊர்திவழி கையெழுத்து போராட்டம்
இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும் சர்வஜன நீதி அமைப்பு இணைந்து முன்னெடுத்து வரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் தம்புள்ளை, மாத்தளை பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
May you like this Video



Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri