மோதர பொலிஸ் நிலையத்தில் ஜோசப் ஸ்டாலினிடம் வாக்குமூலம் பதிவு
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று மோதர பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்குப்பற்றியது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் மோதர பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது நாளை 24ம் திகதி வழக்கு உள்ளதால், இன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டம்
இதுகுறித்து ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்,
இது ஒரு அராஜகமான செயற்பாடு. போராட்டக்காரர்களில் இதுவரை 3553 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1500பேர் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கள மக்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறை
முதலாவதாக வடக்கு கிழக்கு மக்களின் மீதுதான் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பாவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் இச் சட்டத்தை பயன்படுத்தியிருந்தனர். தற்போது சிங்கள மக்கள் மீது இச்சட்டத்தை பிரயோகித்து வருகின்றனர்.
80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இச்சட்டத்தை அதிகமாக பயன்படுத்தியிருந்தனர். தற்போது இச்சட்டத்தை மிக அதிகமாக பயன்படுத்துக்கின்றனர். இது மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
