சஜித்திற்கு அதிர்ச்சியளித்த தமிழரசுக் கட்சியின் முடிவு
தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக எடுத்த முடிவு, சஜித்திற்கு அதிர்ச்சியளித்த ஒரு முடிவு என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக கடந்த 01.09.2024 அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது.
எனினும் குறித்த தீர்மானம் எடுக்கப்படும் வரை இது குறித்து சஜித் தரப்பிற்கு எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகிலுள்ள நாடுகளில் இடம்பெறும் தேர்தல்களில் ஏதோ ஒரு வகையில் மேற்குலக நாடுகள் தனது கடுமையான அழுத்தத்தை பிரயோகிப்பதாக ஆய்வாளர் கூறியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலக நாடுகள் அமைதியாக செயற்படுவது போன்று தோற்றத்தை வெளிப்படுத்தினாலும் தேர்தல் தொடர்பிலான முழுமையான திட்டத்தை மேற்குலக நாடுகள் படிப்படியாக நகர்த்துவதாக ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேசத்தின் நகர்வு தொடர்பில் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,