எனது அரசாங்கத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான வற் வரி நீக்கப்படும் : அனுர உறுதி
எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருந்துகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான வற் (VAT) வரியை நீக்கும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் கூடுதல் வாசிப்புப் புத்தகங்கள் மீதான வற் நீக்கப்படும் எனவும், உணவுப் பொருட்களுக்கான வற் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தமது ஆட்சியில் பழிவாங்கப் போவதில்லை என்றும், எனினும், தவறு செய்பவர்கள் மற்றும் மோசடி மற்றும் ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மோசடி, ஊழலை ஒழிப்போம், திருடப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவோம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam