ரணிலுக்கும் அநுரவுக்கும் இடையிலான புரிதல் : சஜித் வெளியிடும் காரணங்கள்
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் வழங்கும் ஒவ்வொரு வாக்கும் வீணானது என்று சஜித் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது வாக்குகளை வீணாக்குவதை விடுத்து தமக்கு வாக்களிக்க வேண்டும்.
வாக்குகளை வீணாக்காதீர்கள்..
ரணிலுக்கு வாக்களிப்பது என்பது அநுரவுக்கு வாக்களிப்பதாகும். அத்துடன் அநுரவுக்கு வாக்களிப்பது, பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு ஆதரவான வாக்களிப்பாகும் என்று மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய அறிக்கைகள், அவர் தனது வெற்றியில் உறுதியாக இல்லை என்பதையும், அவருக்கும் அநுரவுக்கும் ஒருவித புரிதல் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசத்தை அபிவிருத்தி செய்யும் என்று அநுரகுமார மற்றும் ரணில் ஆகிய இருவரும் பயப்படுகிறார்கள்.
நாங்கள் வீடுகளை நிர்மாணிப்போம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள், அனைத்து அரச பாடசாலைகளையும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றுவோம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
நாங்கள் சுகாதாரத் துறையை மேம்படுத்துவோம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |